முல்லா கதை:

ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி.முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை கடனாக வாங்கி அவரை ஏமாற்ற அந்த டம்பன் தீர்மானித்தான். நிச்சயம் முல்லாவை ஏமாற்றி பெரும் பொருளைக் கடனாகக வாங்கி வருவதாக பலரிடம் சபதம் போட்டு மார்தட்டிக் கொண்டான்.

ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி.முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை கடனாக வாங்கி அவரை ஏமாற்ற அந்த டம்பன் தீர்மானித்தான்.

அந்த டம்பன் சாமர்த்தியமாக செயல்பட திட்டமிட்டான். முல்லா தன்னை நம்பிப் பெருந் தொகை கொடுக்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும், அதனால் தன் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட ஒரு நாடகம் நடித்த எண்ணினான். ஒரு நாள் அவன் முல்லாவிடம் சென்றான்.

முல்லா அவர்களே எனக்கு ஒரே ஒரு காசு கடனாகத் தர முடியுமா? என்று கேட்டான். நம்பிக்கை மோசம் செய்யாத யாருக்கும் நான் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கடன் கொடுக்கத் தயங்க மாட்டேன். நீ ஒரு காசுதானே கேட்கிறாய். இதிலே நீ நம்பிக்கை மோசம் செய்யாமல் இருந்தால் பத்தாயிரம் காசுகள் கேட்டாலும் கொடுப்பேன்" என்று கூறி டம்பனுக்கு ஒரு காசு கடனாகக் கொடுத்தான்.

டம்பன் நாலைந்து நாட்கள் கழித்து முல்லா கொடுத்த ஒரு காசு எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தான். "முல்லா அவர்களே தாங்கள் கடனாகக் கொடுத்தத அற்பப் பொருள்தான் என்றாலும் மிகுந்த நாணயத்தடன் பொறுப்புடன் திரும்பிக் கொடுத்து விடுவது என்று வந்திருக்கிறேன். 

பணவிஷயத்திலே நான் மிகவும் நேர்மையானவன் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று கூறிவாறு டம்பன் ஒரு காசை முல்லாவிடம் திரும்பிக் கொடுத்தான். முகத்திலே மலர்ச்சியில்லாமல், ஏதோ உபாதைப் படுபவர் போல ஒரு காசை வாங்கிக் கொண்டார் முல்லா.

டம்பன் அந்த இடத்தை விட்ட அகலாமல் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். என்ன சமாச்சாரம்? என்று முல்லா கேட்டார். "ஐயாயிரம் பொற்காசுகள் கடனாகத் தரவேண்டும். நாணயமாக ஒரு காசைப் திருப்பிக் கொடுத்தது போல ஐயாயிரம் பொற்காசுகளையும் திரும்பித் தந்த விடுவேன் "என்றான் டம்பன்.

"உனக்கு இனி நான் ஒரு காசு கூடக் கடனாகக் கொடுக்க முடியாது" என்று முல்லா கோபமாகச் சொன்னார் முதலில் நான் வாங்கிய ஒரு காசைத்தான் திரும்பத் தந்தவிட்டேனே" என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் டம்பன்.

"நீ ஒரு காசு கடன் வாங்கிய விஷத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாய்" என்றார் முல்லா. டம்பன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தான். "முல்லா அவர்களே நான் வாங்கிய தொகையை திரும்பிக் கொடுத்திருக்கும் போது நம்பிக்கை துரோகம் செய்ததாக எவ்வாறு கூறுகிறீர்கள்?" என்று திகைப்போடு கேட்டான்.

"நம்பிக்கை மோசந்தான் செய்து விட்டாய் நான் கொடுத்த ஒரு காசை நீ திரும்பி கொடுக்காமல் ஏமாற்றி விடுவாய் என்று நம்பினேன். நீயோ திருப்பிக் கொடுத்து விட்டாய். அதவாது நான் என்ன நம்பினேனோ அதற்கு மாறாக நடந்த விட்டாய் ஆகவே இதுவும் நம்பிக்கை மோசந்தான். அதனால் ஒரு காசு கூட உனக்குக் கடன் தரமாட்டேன்" என்று கூறியவாறே முல்லா வீட்டுக்குள் எழுந்து சென்று விட்டார்.

Previous Post Next Post