முல்லா கதை:

வெகு காலத்திற்குப் பிறகு வெளியூர் அன்பர் ஒருவர் முல்லாவை வந்து சந்தித்தார். இருவரும் சுவையாக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்-தனர். பேச்சின் இடையே வெளியூர் அன்பர் "முல்லா அவர்களே தங்களது வயது என்ன?" என்று கேட்டார்.

"நாற்பது வயது" என்று முல்லா பதிலளித்தார். வெளியூர் நண்பர் வியப்படைந்தவராக" என்ன முல்லா அவர்களே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தங்களைச் சந்தித்தபோதும் உங்களுக்கு வயது நாற்பது என்றுதான் கூறினீர்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நாற்பது வயதையே கூறுகிறீர்களே! அது எப்படி?" என்று கேட்டார்.

"நான் சொன்ன சொல் மாறாதவன். ஒரு தடவை சொன்ன சொல்லை மாற்றிச் சொல்லும் ஈனபுத்தி எனக்குக் கிடையாது" என்று சிரித்துக் கொண்டே கூறினார் முல்லா.

Previous Post Next Post