திருவண்ணாமலை மாவட்டத்தின் சிறப்புகள்:

தமிழகத்தின் நுழைவாயில் என்றழைக்கப்படுகிற தொண்டைமண்டலத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைத் தொடரின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது திருவண்ணாமலை மாவட்டம். இம்மாவட்டத்தில் தொல்பழங்காலம் முதல் மனித இனம் வாழ்ந்து வந்துள்ளதற்கான சுவடுகள் உள்ளன. ஜவ்வாது மலையில் உள்ள கிராமங்களில் புதிய கற் காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் கற்கருவிகள் தயாரித்த இடங்களும், பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்து மறைந்த இடத்தில் அமைக் கப்பட்ட நினைவுச்சின்னங்களும் உள்ளன.

தமிழகத்தின் நுழைவாயில் என்றழைக்கப்படுகிற தொண்டைமண்டலத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைத் தொடரின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது திருவண்ணாமலை மாவட்டம். இம்மாவட்டத்தில் தொல்பழங்காலம் முதல் மனித இனம் வாழ்ந்து வந்துள்ளதற்கான சுவடுகள் உள்ளன.

சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டில் ஒன்றான மலைப்படுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னன் சேய் நன்னன் ஆட்சி செய்த பகுதியான செங்கண்மா என்றழைக்கப்பட்ட செங்கம் திருவண்ணாமலை மாவட் டத்தில் அமைந்துள்ளது. இவன் ஆட்சிக்குப்பட்ட பகுதியில் அமைந் துள்ள நவிரமலை என்பதும் அப்பாட்டில் குறிப்பிடப்படும் சேயாறும் இம்மாவட்டத்தில் அமைந்து அணிசெய்கின்றன.

காஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் இம்மாவட்டம் அமைந் துள்ளதால் பல்லவர்கள் அமைத்த கோயில்கள், குடைவரைகள், கல் வெட்டுகள், போர்க்களங்கள் ஆகியன செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதியில் அமைந்துள்ளன. வந்தவாசி அருகிலுள்ள தெள்ளாரில் 9- ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற போர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மாமண்டூர் குடைவரைக் கோயிலும் சீயமங்கலம் குடைவரைக் கோயிலும் வரலாற்று சிறப்பானவை ஆகும். 

பல்லவர்களுக்குப் பின்ன மைந்த சோழர்களின் ஆட்சிக்காலத்தில் சோழர் கால கல்வெட்டுகள், கட்டடக்கலைகள், ஒவியம், நுண்கலைகள் ஆகியனவும் சிறப்பு பெற்றுள்ளன. பிரம்மதேசம் மற்றும் கூழமந்தல் கோயில்களும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலும் சோழர்காலக் கட்டடக் கலைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. சோழர் ஆட்சிக்குப்பின் சம்புவ ராயர்களின் ஆட்சி நடைபெற்றது.

விஜயநகர அரசகர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் நெடிதுயர்ந்த கோபுரங்களும் மகாமண்டபங்களும், எழில்மிகுந்த சிற்பங்களும் ஓவியங்களும் கோயில்களில் இடம்பெற்றன. திருவண்ணாமலை, தேவிகாபுரம், நெடுங்குன்றம் போன்ற கோயில்கள் கலைக் கோயில்களாக திகழ்கின்றன.

ஜவ்வாது மலையில் உள்ள கிராமங்களில் புதிய கற் காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் கற்கருவிகள் தயாரித்த இடங்களும், பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்து மறைந்த இடத்தில் அமைக் கப்பட்ட நினைவுச்சின்னங்களும் உள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஆரணி போர், திருவண்ணாமலை போர், வந்தவாசி போர் ஆகியன முதன்மையான வரலாற்று நிகழ்வுகளாகும். ஆற்காடு நவாபிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனியாருக்கு அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தொண்டை மண்ட லத்தில் பாலாறுக்கு வடக்கு அமைந்துள்ள பகுதி வடஆர்க்காடு என்றும் தெற்கே அமைந்துள்ள பகுதி தென்ஆர்க்காடு என்றும் பிரித் தனர். பிறகு நிர்வாக வசதிக்காக பல முறை மாவட்ட எல்லைகள் மறுசீர மைக்கப்பட்டது.

1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வட ஆற்காடு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு திருவண்ணா மலையைத் தலைமையிடமாகக் கொண்டு திருவண்ணாமலை சம்புவ ராயர் மாவட்டம் தோன்றியது. பின்பு இம்மாவட்டத்தின் பெயர் திருவண்ணாமலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இம்மாவட்டம் 6188 ச.கி.மீ. பரப்பளவும் 24,64,875 மக்கள் தொகையும் கொண்டுள்ளது.

Previous Post Next Post