வேதாளம் கதை கூறுதல் :

வேதாளத்தை தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்யனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. இதோ அந்த கதை. ஒரு சமயம் "இந்திரபுரம்" என்ற நாட்டை "மஹிபாலன்" என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அந்த மூன்று பேரும் ஒவ்வொருவரும், ஒவ்வொவொரு விதத்தில் இளகியவர்களாகவும், மென்மையானவர்களாகவும், உணர்வு பூர்வமானவர்களாகவும் இருந்தனர்.

ஒரு சமயம் "இந்திரபுரம்" என்ற நாட்டை "மஹிபாலன்" என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அந்த மூன்று பேரும் ஒவ்வொருவரும், ஒவ்வொவொரு விதத்தில் இளகியவர்களாகவும், மென்மையானவர்களாகவும், உணர்வு பூர்வமானவர்களாகவும் இருந்தனர்.

ஒரு முறை அந்த மூன்று மனைவிகளில் முதலாவது மனைவி, அரண்மனை நந்தவனத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவள் கை மீது ஒரு மலர் விழுந்து. அதனால் அவளுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதற்கு அடுத்த நாள் மன்னன் மஹிபாலனும், அவனது இரண்டாவது மனைவியும், இரவு நேரத்தில் அரண்மனையின் உப்பரிகையில் நிலா வெளிச்சத்தில் பேசிக் கொண்டிருந்த போது, அந்த நிலவொளி அவள் மீது பட்டு, அவளது தோலில் காயங்கள் உண்டானது.

கேள்வி கேட்ட வேதாளம்:

மற்றொரு நாள் அம்மன்னனின் மூன்றாவது மனைவி, தன் அரண்மனையில் யாரோ ஒருவர் அழும் சத்தத்தை கேட்டதற்கே மயங்கி விழுந்துவிட்டாள். ”விக்ரமாதித்தியா இந்த மூவரில் மிகவும் இளகிவராகவும், மிகவும் மென்மையானவராகவும், மிகவும் உணர்வுபூர்வமான பெண் யார்? என்று வேதாளம் கேட்டது.

"நிச்சயம் அந்த மூன்றாவது மனைவி தான். ஏனெனில் யாரோ ஒருவர் அழுவதை கேட்டதற்கே அவள் மயங்கிவிட்டாள். பிறரின் துன்பத்தை, தன் துன்பமாக ஏற்கும் மனிதர்களே உண்மையில் உணர்வு பூர்வமானவர்கள். எனவே அந்த் மூன்றாவது மனைவி தான் மற்ற இருவரை விட மிக மென்மையானவளும், மிக இளகியவளும், மிக உணர்வுபூர்வமானவளும் ஆவாள்" என விக்ரமாதித்தியன் விடையளித்தான்.

இத்தகைய பதிலைக் கேட்டவுடன் வேதாளம், விக்ரமாதித்யனிடமிருந்து தப்பி மீண்டும் முருங்கை மரத்தின் ஏறிக்கொண்டது. அதை மீண்டும் பிடிக்க சென்றான் விக்ரமாதித்தியன்.

Previous Post Next Post