பண்டையத் தமிழகம்:

பண்டைத் தமிழரின் வணிகத் தொடர்பு நாடுகள் கிரேக்கம், ரோம், எகிப்து, மற்றும் வளைகுடா நாடுகளின் பண்டைய பெயர் யவனம் ஆகும். யவனக் கப்பல்கள் வந்த தமிழகத் துறைமுகங்கள் புகார், கொற்கை. யவனத்திலிருந்து முக்கிய இறக்குமதி தங்கம். யவனத்திற்கு முக்கிய ஏற்றுமதிகள் மிளகு, முத்து, வாசனைப் பொருட்கள், பட்டு, பருத்தி உடை, பாக் நீர்க்கூடுகையும், மன்னார் வளைகுடாவையும் தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் நாடு ஸ்ரீலங்கா ஆகும்.

பண்டைத் தமிழரின் வணிகத் தொடர்பு நாடுகள் கிரேக்கம், ரோம், எகிப்து, மற்றும் வளைகுடா நாடுகளின் பண்டைய பெயர் யவனம் ஆகும். யவனக் கப்பல்கள் வந்த தமிழகத் துறைமுகங்கள் புகார், கொற்கை. யவனத்திலிருந்து முக்கிய இறக்குமதி தங்கம். யவனத்திற்கு முக்கிய ஏற்றுமதிகள் மிளகு, முத்து, வாசனைப் பொருட்கள், பட்டு, பருத்தி உடை, பாக் நீர்க்கூடுகையும், மன்னார் வளைகுடாவையும் தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் நாடு ஸ்ரீலங்கா ஆகும்.

இமயம் முதல் குமரி வரைப் பரவியுள்ள இந்தியத் திருநாட்டில் தென்கோடி முனையில் அமைந்துள்ள மாநிலமே தமிழ்நாடு. ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னாட்டின் பெரும்பகுதி சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்றபின் தமிழ்மொழி பேசப்படும் மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது.

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்: 

வரலாற்றுக்குக் காலத்திற்கு முன்னர், குமரி முனைக்குத் தெற்கே உள்ள இந்துமாக்கடல் பகுதி, ஒரு பெருநிலப்பரப்பாக இருந்தது அதைக் குமரிக் கண்டம் என்பர். கடற்கோளால் மூழ்கிப்போன குமரிக் கண்டத்தில் தான் பல்லுயிர்கள் பெருகுவதற்கான தட்பவெப்பச் சூழல் நிலவியது. அதனால் பரிணாம வளர்ச்சி முறையில் அங்கு தான் முதல் மனித இனம் தோன்றியிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த மாந்தன் என்கிற மனிதன் பேசிய முதல் மொழியே, தமிழின் மூல மொழியாகும். அந்த இனமே தமிழ் இனம் எனவும் ஆய்வாளர் தெரிவிக்கின்றனர். அந்தப் பெருநிலத்தின் ஒரு பகுதியான தென்னாட்டில் வாழ்வோர், அந்தக் குமரிக் கண்ட மாந்தர் என்கிற மனிதன் வழிவந்த இனத்தாராகத்தான் இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

லெமூரியாக் கண்டம் :

லெமூரியாக் கண்டம் இதற்கு மாறாக, குமரிக் கண்டத்திற்கு முன்னதாக அப்பகுதியை உள்ளடக்கிய ஒரு பெரும் கண்டம், ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலியாவையும் இணைக்குமாறு நிலவியதென்கின்றனர்.

அந்தக் கண்டத்தில் வாழ்ந்த 'லெமூர்' என்னும் குரங்கினத்தின் பெயரால் அக்கண்டம் "லெமூரியா கண்டம்” என்று பெயர் பெற்றது என்றும், அங்குத் தோன்றிய மனிதக் குரங்கே முதல் மனிதன் பிறக்கக் காரணம் என்றும் கருதுகின்ற ஆய்வாளரும் உள்ளனர். எவ்வாறாயினும் முதல் மனித இனம், குமரிக்குத் தெற்கே இருந்த கண்டத்தில்தான் தோன்றியது. அவ்வினமாந்தர் பேசிய மொழியின் மூலமே தொல்தமிழ். அவர்தம் வழிவழி வந்த மரபினர் வாழும் நிலமே 'தமிழ்நாடு' என்று முடிவு செய்யலாம். தமிழக வரலாற்றை வரலாற்றுக்கு முற்பட்ட காலம், சங்க காலம், பல்லவர் காலம், பாண்டியர் காலம், சோழரின் பேரரசுக் காலம், மத்திய காலம் மற்றும் பிற்காலம் என ஆறு காலங்களாக வரையறுத்துக் கொள்ளலாம்.

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம் (காலம்)

தமிழகத்தைப் பொருத்த வரையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை, 

1.பழைய கற்காலம் 
2.புதிய கற்காலம் 
3. உலோகக் காலம் 
4.பெருங்கல் காலம் என வகைப்படுத்தலாம். 

தமிழகத்தின் பழைய கற்காலம்:

கி.மு.10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பழைய கற்காலம் ஆகும். பழைய கற்கால மனிதர்கள் குவார்ட்சைட் எனப்படும் கற்களை வேட்டையாடும் கருவிகளாகப் பயன்படுத்தினர். ராபர்ட் புரூஸ் பூட் என்பவர் தமிழகத்தில் முதன் முதலாக பழைய கற்கால கருவிகளை சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரத்தில் கண்டறிந்தார். இரண்டு சிக்கி முக்கி கற்களை உரசுவதன் மூலம் பழைய கற்கால மக்கள் நெருப்பை உருவாக்கினர். பழைய கற்கால மக்கள் உணவைத் தேடி அலையும் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டனர். பயிரிடுதல் மற்றும் மட்பாண்டங்கள் செய்தல் போன்றவற்றை இவர்கள் அறிந்திருக்கவில்லை. இறைவன் அல்லது சமயம் குறித்த சிந்தனை பழைய கற்கால மனிதர்களுக்கு இல்லை.

குறிப்பு 

தி.மு. - தி.பி. என்பது திருவள்ளுவரின் பிறப்பாண்டான கி.மு. 31 ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு கணக்கிடுவதாகும். தமிழறிஞர்களின் முடிவின்படி, கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் என்று , காலத்தைக் கொண்டு கணக்கிடுவதைத் தமிழக அரசும் ஏற்று அறிவித்துள்ளது.

தமிழகத்தின் புதிய கற்காலம்:

கி.மு. 10,000 முதல் கி.மு. 6000 வரையிலான காலம் புதிய கற்காலம் எனப்படுகிறது. புதிய கற்கால மக்கள் நாடோடி வாழ்க்கையை கைவிட்டு, ஓரிடத்தில் கூட்டமாக தங்கி வாழ்ந்தனர். இவர்கள் களிமண் குடிசை மற்றும் கூரை வீடுகளை அமைத்து அவற்றில் வாழ்ந்தனர். வேளாண்மை இவர்களது முக்கிய தொழிலாகும். இவர்கள் மட்பாண்டங்களையும் உற்பத்தி செய்தனர். 

புதிய கற்கால மக்கள் நாய், ஆடு, மாடு, பசு, எருது போன்ற பிராணிகளை வளர்த்தனர். புதிய கற்கால மக்களால் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது புதிய கற்கால மக்கள் நெசவுத்தொழிலை அறிந்திருந்தனர். தமிழகத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் மற்றும் கருவிகள் திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, தான்றிக்குடி (கொடைக்கானல் மலை) மற்றும் திருச்சி மாவட்டங்களில் கிடைத்துள்ளன. இறந்தோரின் உடலை ஒரு பெரிய மண் தாழியில் வைத்து அடக்கம் செய்யும் முறை புதிய கற்காலத்தில் வளர்ந்தது. புதிய கற்கால மக்கள் இறந்தோரை வழிபட்டனர்... 

தமிழகத்தின் உலோக காலம்:

கி.மு.6000 முதல் - கி.மு.4000 வரையிலான காலம் உலோகக் காலம் ஆகும். மனிதன் அறிந்த முதல் உலோகம் செம்பு ஆகும்.. வட இந்தியாவில் கற்காலத்தை அடுத்து வந்த காலத்தை செம்பு காலம் என்று அழைத்தனர், ஆனால் தென்னிந்தியாவில் கற்காலத்தையடுத்து மனிதன் இரும்பைக் கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கினான். எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலத்தை இரும்புக் காலம் என்று தொல்லியல் அறிஞர்கள் அழைக்கின்றனர். சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்தில் கற்காலக் கருவிகளுடன் இரும்பினாலான கருவிகளும் கண்டெடுக்கப்பட்டடன.

தமிழகத்தின் பெருங்கல் காலம்:

பெருங்கல் என்ற சொல்லுக்கு நீர்த்தார் நினைவுச் சின்னம் என்று பொருள். சிகப்பு மற்றும் கருப்பு நிறங்களிலான மண் தாழிக்குள் இறந்தோரின் உடலை வைத்து புதைத்து, அதன் மேல் பெரிய பாறைக்கல் துண்டுகளை வட்டமாக அடுக்கி வைத்தனர். இதுவே நீத்தார் நினைவுச் சின்னமாகும். புதிய கற்காலத்திற்குப் பின் வாழ்ந்த மக்கள் நீத்தார் நினைவுச் சின்னங்கள் அமைக்கும் வழக்கத்தைப் பின்பற்றினர். பெருங்கற்கால நீத்தார் நினைவுச் சின்னங்கள் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி மற்றும் புதுகோட்டை மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுக் காலம்:

தமிழ்நாட்டைக் குறித்து அறியக் கூடிய வரலாற்றுக் காலம் சங்க காலத்திலிருந்தே தொடங்குகிறது. சங்க காலம் என்பது கடைச்சங்கத்தில் புலவர்கள் அவ்வப்போது கூடி தமிழ் ஆய்வு செய்த காலமாகும். அது தி.மு.ஆண்டு 200 முதல் தி.பி.ஆண்டு 200 வரை 400 ஆண்டுக் காலமாகும். அது தி.மு. 300 முதல் தி.மு. 300 வரை என்று கொள்வோரும் உண்டு.

சங்க காலத்திலேயே அனைத்துச் சமயத்தாரும் வியந்து போற்றும், 'திருக்குறள்' தோன்றி இருக்கிறது என்பது தமிழக்குத் தனிப் பெருமையாகும். அதனால் தான் தேசியகவி பாரதியார், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று முழங்கியுள்ளார். நமது தாய்மொழி தமிழ் இலக்கண வரம்பு கொண்டு வளர்ந்தமையால், 'செந்தமிழ்’ என்று வழங்கப்பட்டது. பிறமொழிகளின் துணை தேவையின்றியே 'தமிழ்’ வளரும் திறன் பெற்றிருப்பதால் தமிழை உயர்தனிச் 'செம்மொழி' என்றும் அறிஞர்கள் குறிப்பிடுவர்.

குறிப்பு :

மத்தியக் காலம்: முடிவும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் மதுரைப்பாண்டியரின் வீழ்ச்சியும், மதுரை நாயக்கர் ஆ ட்சியின் தோற்றமும் முடிவும், மத்திய காலம் என்ற பகுப்பில் அடங்குகின்றன.

பிற்காலம்: கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய மண்ணில் கால் எடுத்து வைத்தது முதல் தற்காலம்வரையிலான காலப் பகுதியைப் பிற்காலம் எனக் குறிப்பிடுகின்றோம்.

தமிழக வரலாற்றைத் தொகுக்க உதவும் கல்வெட்டுகள் பல்லவர் காலத்தில்தான் தொடங்குகின்றன. கல்வெட்டுகள் தமிழகத்தில் ஏறத்தாழ கி.மு.இரண்டாம் நூற்றாண்டு முதல் காணப்படுகின்றன. தமிழகத்தில் ஏறக்குறைய 25,000 கல்வெட்டுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பெயர் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும், அரிக்கமேட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் செப்புப் பட்டயங்கள் சில தோன்றியுள்ளன. அவற்றுள் இரண்டாம் சிம்மவர்மனின் (சுமார் கி.பி .550) ஆறாம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட பள்ளன்கோயில் செப்புப் பட்டயங்களே முதன்முதலாக வடமொழியும் தமிழும் கலந்தவையாகும். 

சோழப் பேரரசு காலத்தில் தோன்றிய செப்பேட்டுச் சாசனங்கள் மிகப் பெரியவை. அவற்றில் கூறப்படும் மெய்க்கீர்த்திகள் மிக விரிவானவை. இக்காலச் செப்பேடுகளில் மாபெரும் செப்பேடு திருவாலங்காட்டுச் செப்பேடேயாகும். செப்பேடுகள் பொதுவாக வாழ்த்துப் பாடல்களுடன் (மங்கள சுலோகங்களுடன்) தொடங்கின. அதைத் தொடர்ந்து கொடையளித்தவரின் மெய்க்கீர்த்தி, அவரது பண்டைய அரச பரம்பரையின் வரலாறு ஆகியவை இடம்பெற்றன. அதற்குப் பின் நன்கொடையின் முழு விவரமும், நன்கொடை பெறுபவரின் முழுப் பெயரும், வரலாறும் குறிப்பிடப்பட்டிருந்தன.

Previous Post Next Post