விக்ரமாதித்தனின் கதையின் வரலாறு

காளி தேவியின் பக்தனான விக்கிரமாதித்தன் வடநாட்டில் உள்ள உஜ்ஜைனியை ஆண்டு வந்தான். ஆறுமாதம் நாடு, ஆறு மாதம் காடு என்று அவன் ஆண்டு வந்த அவன், காடாறு மாத சமயத்தில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வான். ஒரு முறை தெற்கே வந்தான். கையோடு தான் கொண்டு வந்த காளி தேவியைக் காவிரிக்கரையில் வைத்துப் பூஜித்து வந்தான். அந்தக் காளி தான் திருச்சியில் மகாகாளிகுடி ஊரில் குடியிருக்கும் உஜ்ஜைனி மகாகாளி அம்மன்.

காளி தேவியின் பக்தனான விக்கிரமாதித்தன் வடநாட்டில் உள்ள உஜ்ஜைனியை ஆண்டு வந்தான். ஆறுமாதம் நாடு, ஆறு மாதம் காடு என்று அவன் ஆண்டு வந்த அவன், காடாறு மாத சமயத்தில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வான்.

தன்னை தினமும் பூஜித்த விக்கிரமாதித்தனிடம் காளி ஒருமுறை இங்கிருந்து இரண்டுகல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோவிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு முப்பத்திரண்டு கதைகளையும் உன் வாழ்வுக்கு வர இருக்கும் யோக ரகசியங்களையும் சொல்லும். அதன்படி நடந்து நீ உன்னத பதவியைப் பெறு என்று கூறி மறைந்தாள். காளிதேவியின் கட்டளைப்படி அங்கு சென்ற விக்கிரமாதித்தன் வேதாளம் கூறிய முப்பத்திரண்டு கதைகளுக்கும் விடை கூறி அதற்கு சாப விமோசனம் அளித்தான்.

வேதாளம் அறிமுகம்

வேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஓவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன விக்கிரமாதித்தன் கதைகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன.

முதல் பகுதி போஜராஜன் என்பவனுக்கு ஒரு காட்டில் கனகமணி சிம்மாசனம் கிடைப்பதை விவரிக்கிறது. அந்த சிம்மாசனத்தில் 32 படிகள் இருக்கின்றன. அந்த சிம்மாசனத்தின் மீது ஏறி அமர்ந்து ஆட்சி செய்ய விரும்பும் போஜராஜன் அதன் மீது ஏறப் போகும் போது அந்தப் படிகளில் இருக்கும் பதுமைகள் கைகொட்டிச் சிரிக்கின்றன. இந்த சிம்மாசனம் வீரமும் அறிவும் பராக்கிரமும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த விக்கிரமாதித்ய மகாராஜா அமர்ந்திருந்தது. 

இதில் ஏறி அமர உனக்குத் தகுதி இருக்கிறதா என்று பார்த்துக் கொள் என்று கேலி பேசுகின்றன. அந்தப் பதுமைகளில் முதல் பதுமை விக்கிரமாதித்ய ராஜா பற்றியும் அவனுடைய மதியூக மந்திரி பட்டி பற்றியும் இந்த சிம்மாசனம் இந்திரனிடமிருந்து அவனுக்குக் கிடைத்த கதையையும் சொல்கிறது. முதல் தொகுதியின் தொடர்ச்சியாக ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதுமையாகச் சொல்கின்ற கதைகளின் தொகுப்பாக இரண்டாம் பகுதி இருக்கிறது.

பதுமைப் பெண்கள் உருவான கதை

தோழியர் முப்பத்திரண்டு பேர் பார்வதி தேவியுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் சிவபெருமான் அங்கே வந்து விட்டாராம். அவர் ஆசை மிகுந்த கண்களுடன் முப்பத்திரண்டு பேரையும் பார்த்ததால் பார்வதி கோபம் கொண்டு தோழியரைச் சபித்தாராம். என் கணவர் வருவது தெரிந்தும் அசையாமல் இருந்த நீங்கள் பதுமைகளாக மாறி இந்திரனின் சிம்மாசனத்தில் இருக்கக் கடவது என்றாளாம் தேவி.

சாபவிமோசனம் கேட்டு அவர்கள் அழுதபோது தேவி சொன்னாளாம். அந்த சிம்மாசனம் இந்திரனிடமிருந்து விக்கிரமாதித்யன் கைக்குச் செல்லும். அவன் இரண்டாயிரம் வருடம் ஆட்சி செய்த பிறகு மண்ணில் மூழ்கிக் கிடக்கும். பின்னொரு நாளில் போஜராஜன் அதனைத் தோண்டி எடுத்து அதன் மீது அமரப் போவான். 

அவனுக்கு விக்கிரமாதித்யனின் அருமை பெருமைகளை நீங்கள் சொல்லி முடித்த பிறகு சாபவிமோசனம் அடைவீர்கள் அதன்படி எங்களுக்கு விமோசனம் தாருங்கள் என்று வேண்டி நின்றனவாம் பதுமைகள். போஜராஜன் சிம்மாசனத்தின் படிகளில் இருந்து கீழே இறங்கி நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிவபெருமானின் தங்கச் சிலையை வரவழைத்து சிம்மாசனத்தில் அமர்த்தினான். 

அதற்கு பூஜை வகையறாக்கள் செய்ய பதுமைப் பெண்கள் அவனை ஆசீர்வதிக்க. சிம்மாசனம் மெல்ல உயர்ந்து பறந்து வான்வெளியில் மறைந்தது என்று முடிகிறது விக்கிரமாதித்தன் கதை. தோழியரே என்றும் போஜ ராஜனால் சாபவிமோசனம் அடையக் காத்திருந்தவர்கள் என்றும் சொல்லி உச்சக்கட்டப் புதிர் போடுகிறது.

Previous Post Next Post